புதுடெல்லி: டெல்லி யில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத் தில் இளையர் ஒருவர் அறைந்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியது. போலிசாரால் கைது செய்யப்பட்டு விசா ரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ், 33, என்னும் அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
"அன்று ஏன் அப்படி நடந்துகொண்டேன் என எனக்குத் தெரியவில்லை. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. இச்சம்பவத்திற்கு நானே முழுப்பொறுப்பு. நான் போலிஸ் காவலில் இருந்தபோது எனக்கு எவ்வித தொந்தர வும் ஏற்படவில்லை. என்னை யாரும் துன்புறுத்தவும் இல்லை," என்று சுரேஷ் கூறியுள்ளார்.

