திருவனந்தபுரம்: கேரள மாநிலத் தில் கடந்த மாதம் 23ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற் றது. அந்தத் தேர்தலில் 25,000 போலிசாரின் தபால் வாக்குகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் களுக்கு போடப்பட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியது.
ஆனால் இந்த தபால் வாக்குச் சீட்டுகள் மொத்தமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆத ரவு சங்கத் தலைவர்களின் முக வரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாகவும் அந்த வாக்குகள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் களுக்கு பதிவு செய்யப்பட்டதாக வும் சில போலிசாரை மிரட்டி அவர்களது தபால் வாக்குகளைப் பெற்று அதையும் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து கேரள தலைமை தேர்தல் அதிகாரி அதி ரடி உத்தரவு ஒன்றை பிறப்பித் தார். வருகிற 15ஆம் தேதிக் குள் இது தொடர்பாக விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த மோசடிப் புகார் தொடர் பில் காவலர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் நான்கு போலிசாரிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருவதாக வும் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கூறினார்.
இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் முதலமைச் சர் பினராய் விஜயனின் பாது காப்புப் படையில் ஐந்து மாதங் கள் பணியாற்றியவர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

