மாணவி: சீரழித்த ஐவரையும் தூக்கிலிடவேண்டும்

மாணவி: சீரழித்த ஐவரையும் தூக்கிலிடவேண்டும்

2 mins read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த ஆல்வார் பகுதியைச் சேர்ந்த தலித் இன இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 26ஆம் தேதி தனது கண வருடன் வெளியே சென்றபோது தனகழி என்ற பகுதிக்கு அருகே 5 இளையர்களால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டார்.

சுமார் 3 மணி நேரம் நடை பெற்ற அந்தக் கொடூரச் செயலை 11 காணொளிகளாக எடுத்து அவ்விருவரிடமும் பணம் கேட்டு மிரட்டியதாக செய்திகள் வெளி யாயின. இதுகுறித்து ஊடகங் களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனர், "எனது சகோதரரும் அவரது மனைவி யும் ஆல்வாரில் கடைவீதிக்கு பைக்கில் சென்றபோது அவர் களைப் பின்தொடர்ந்த ஐவரும் வழிமறித்தனர். பைக்கை கால் வாயில் தள்ளிவிட்டு இருவரை யும் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று நிர்வாணப் படுத்தி, காணொளி எடுத்தனர். பின்னர் குச்சியால் இருவரையும் பலமாக தாக்கினர். தனது கணவர் அடி வாங்குவதைப் பார்த்து மிரட்டலுக்குப் பணிந்த பெண்ணை மூன்று மணிநேரம் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்து விட்டனர்," என்றார்.

20 வயது மாணவியான அப் பெண் இளமையில் மண முடித் தவர். தமக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "ஐந்து கொடுமைக் காரர்களையும் கைது செய்தால் மட்டும் போதாது. அவர்கள் அத் தனை பேரையும் தூக்கில்போடும் வரை நீதிக்கான எனது போராட் டத்தைக் கைவிடமாட்டேன்," என்றார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே அசோக், கர்ஜார், முகேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய இரு இளையர்களும் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர்.