புவனேஸ்வர்: ஃபானி புயல் கொடூரமாகத் தாக்கிய ஒடிசா மாநிலம் இன்னும் நிலைகுலைந்த வாறே உள்ளது.
அந்த மாநிலத்தின் சுமார் 14 மில்லியன் மக்கள் சொல்ல வொண்ணாத் துயரை அனு பவித்து வருகின்றனர்.
புயல் தாக்கிய ஒரு வாரம் கழிந்த நிலையில் அங்குள்ள நிலவரங்களை நேற்று முன்தினம் செய்தியாளர்கள் திரட்டினர். ஏராளமான மக்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்ட படாதபாடு பட்டு வருவதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
குடிக்க தண்ணீர் இல்லை; போதுமான மின்சாரம் இல்லை; ஜெனரேட்டர்களால் இயக்கப் படும் ஏடிஎம் இயந்திரங்களில் தங்களது பணத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கின்றனர். ஜென ரேட்டர்கள் சில மணி நேரங் களுக்கு மட்டுமே இயங்குகின் றன. அதற்குத் தேவையான டீசல் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதால் அவை வேலை செய் வதில்லை. அதற்கு காரணமாக பல ஏடிஎம் இயந்திரங்கள் முடங்கி கிடக்கின்றன.
அப்படியே இயங்கினாலும் சில ஏடிஎம்களில் பணம் இருப்ப தில்லை.
தலைநகரிலும் புயல் பல மாகத் தாக்கிய பூரி மாவட்டத் திலும் எரிபொருள் நிலையங்கள் ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரையிலே திறக்கப்படுகின்றன. எனவே வாகனங்களுக்கு போது மான எரிபொருள் கிடைக்க வில்லை. அதனால் வாகன நடமாட்டம் இன்றி சாலைகள் இன்னும் வெறிச்சோடிக் கிடக் கின்றன.
விவசாயிகள் பாடு மிகவும் மோசம். பூரி மாவட்டத்திற்குட் பட்ட பிபிலி கிராமத்தில் நிரஞ்சம் மொயாபாத்ரா என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் இருந்த 7,000 பறவைகளை புயல் விழுங்கிவிட்டது.
"ஒவ்வொரு பறவையையும் குறைந்தபட்சம் 150 ரூபாய்க் காவது விற்றிருப்பேன். இப்போது அத்தனையும் போய்விட்டதால் என் பிழைப்பு நடுத்தெருவுக்கு வந்துவிட்டது," என்று அவர் செய்தியாளர்களிடம் வேதனைப் பட்டார்.

