சுடச் சுடச் செய்திகள்

பிரிவினைவாதத் தலைவர் மோடி: ‘டைம்’ விமர்சனம்

புதுடெல்லி: அமெரிக்கா வின் ‘டைம்’ மே 20ஆம் தேதி பதிப்பு நேற்றுவெளியானது. இதில், அட் டைப்பட கட்டுரையாக இந்திய பிரதமர் மோடியை ‘இந்தியாவின் பிரிவினைவாதத் தலைவர்’ என்று விமர்சித்து எழுதப் பட்டுள்ளது. 

ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதி உள்ள அட்டைப்படக் கட்டுரை, ஜன நாயக நாடான இந்தியா, மோடி ஆட்சியில் மதங்களால் பிரிக்கப்பட்டு வருவதாக விமர்சிக்கிறது. இந்தியா வின் மதச்சார்பின்மை, பத்திரிகைச் சுதந்திரம் ஆகியன சிதைக்கப்பட் டுள்ளன எனவும் குஜராத் கலவரத் தையும் பசுப்பாதுகாப்பு என்ற பெய ரில் நடக்கும் வன்முறைகளையும் இந்தக் கட்டுரை கண்டிக்கிறது. 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு மோடி ஆட்சியைத் தாங்குமா? என கட்டுரையாளர் ஆதிஷ் கேள்வி எழுப்புகிறார். இந்தியா மட்டுமின்றி துருக்கி, பிரேசில், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ‘பெரும் பான்மைவாதம்’ வேகமாக வளர் வதைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon