சீக்கியர் படுகொலையில் பங்கு: ராஜீவ் காந்தி குறித்து மோடியின் அடுத்த விமர்சனம்

சீக்கியர் படுகொலையில் பங்கு: ராஜீவ் காந்தி குறித்து மோடியின் அடுத்த விமர்சனம்

2 mins read

புதுடெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மக்களவைத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. பிரதமர் மோடியும் ராஜீவ் குறித்து வரிசையாக விமர்சித்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது சீக் கியர்கள் படுகொலை விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.

1984ல் இந்திரா காந்தி படு கொலையைத் தொடர்ந்து பல்லா யிரக்கணக்கான சீக்கியர்கள் படு கொலை செய்யப்பட்டனர்.

அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்தான் படுகொலைக்குக் கார ணம் என மூத்த வழக்கறிஞர் பூல்கா குற்றம் சாட்டியிருந்தார். அதற்குப் பதிலளித்த மூத்த காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தமது டுவிட்டரில், பஞ்சாப் பொற் கோவிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு சீக் கியர் படுகொலைகளின்போது நடந்த உண்மைகளை மூடி மறைக் கின்றனர் என்றார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி, "சீக்கியர்கள் படுகொலை யின்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, 'ஒரு பெரிய ஆல மரம் சாய்கின்றபோது பூமி லேசாக அதிரத்தான் செய்யும்' என கருத்து தெரிவித்திருந்தார். அப்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப் பாளராக இருந்தவர் கமல்நாத். அவர்தான் இப்போது மத்திய பிரதேசத்தின் முதல்வர். ஆகை யால் சாம்பிட்ரோடோவின் கருத்து தனிப்பட்டதானது அல்ல. அது தான் காங்கிரஸின் குணமே," என்று விமர்சித்துள்ளார்.

60,000 போலிஸ் குவிப்பு

மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்டம் நாளை நடைபெறுவதை யொட்டி நேற்று மாலையுடன் பிர சாரம் ஓய்ந்தது. உத்தரப் பிரதேசத் தில் 14 தொகுதிகள், மேற்கு வங் கம், பீகார், மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கு என மொத்தம் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. டெல்லியில் மட் டும் 60,00 போலிசார் தேர்தல் பாதுகாப்பில் அமர்த்தப்பட உள்ளனர்.