தொழில்நுட்பக் கோளாறு: இரு விமானங்கள் தரையிறக்கம்

தொழில்நுட்பக் கோளாறு: இரு விமானங்கள் தரையிறக்கம்

1 mins read

மும்பை: புறப்பட்ட உடனேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் இரு விமானங்கள் உடனடியாக தரையிறங்கின. இதனால் விமானப் பயணிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது.

நேற்று காலை 7.30 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் புறப் பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் மும்பையிலேயே தரையிறங்க அனுமதி கேட்டார் விமானி.

அனுமதி கிடைத்ததை யடுத்து அந்த விமானம், சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதே போல் பெங்க ளூருவில் இருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட மற்றொரு போயிங் ரக விமானத்திலும் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை பாதை மாற்றி நாக்பூரில் தரையிறங்க அனுமதி கேட்டார் விமானி.

சில நிமிடங்களில் அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

இவ்விரு சம்பவங் களிலும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ஸ்பைஸ் ஜெட் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங் களுக்கு மாற்று விமானங் கள் மூலம் அனுப்பி வைக் கப்பட்டதாகத் தெரிகிறது.

ஒரே நாளில் இரு விமானங்களில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதும், உடனடியாக அவை தரையிறக்கப்பட்ட தும் விமானப் பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.