கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் மத்திய ஆட்சியாளர்களால் பணப்பெட்டிகளைக் கொண்டு தேர்தல் நடத்த இயலாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சமூக விரோத சக்திகளுக்கு தேர்தலுக்கு முன்பே பணம் கொடுத்து வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுமாறு பாஜக தலைவர்கள் கூறியுள்ளதாக அவர் பிரசாரக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் குற்றம்சாட்டினார்.
ஆனால் பாஜக தரப்பு இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தோல்வி பயத்தில் மம்தா இவ்வாறு பொய்களைக் கூறுவதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

