சமூக வலைத்தளத்தில் மம்தாவை கேலி செய்த பாஜக நிர்வாகி கைது

சமூக வலைத்தளத்தில் மம்தாவை கேலி செய்த பாஜக நிர்வாகி கைது

1 mins read

கோல்கத்தா: திரைப்பட நடிகை யின் புகைப்படத்தில் அவரது முகத்தை மட்டும் நீக்கி பின்னர் மேற்குவங்க மாநில முதல் வர் மம்தா பானர்ஜியின் முகத்தை கணினித் தொழில்நுட்பத்துடன் இணைத்து இணையத்தில் வெளி யிட்ட பாஜக நிர்வாகி கைதானார்.

அவரது இச்செயல்பாட்டுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கைதான நிர்வாகியின் பெயர் பிரியங்கா சர்மா. இவர் மேற்கு வங்க மாநில பாஜக இளையரணித் தலைவராகப் பொறுப்பு வகிக்கி றார்.

இவர் கடந்த 9ஆம் தேதி மேலே உள்ள புகைப்படத்தை தமது சமூக வலைத்தளப் பக்கத் தில் வெளியிட்டிருந்தார். அது நடிகை பிரியங்கா சோப்ராவின் அண்மைய புகைப்படம் ஆகும். கணினித் தொழில்நுட்ப உதவி யோடு பிரியங்கா சோப்ராவின் முகப் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு அங்கு முதல்வர் மம்தாவின் முகத்தைப் பொருத்தியுள்ளார் பிரியங்கா சர்மா.

இதனால் கடும் அதிருப்தி யடைந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விபாஸ் ஹசாரே போலி சில் புகார் அளித்தார். அதன் பேரில் பிரியங்கா சர்மா கைதானார்.

"பிரியங்காவின் செயல்பாடு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். இதை வன்முறை நிறைந்த செயலாகவே கருத வேண்டும். சமூக வலைத்தளப் பதிவின் மூலம் அவர் முதல்வரை மட்டுமல்லாமல் மேற்கு வங்க மாநிலத்தின் கலாசாரத்தையும் இழிவுபடுத்தி உள்ளார்," என விபாஸ் ஹசாரே தெரிவித்துள்ளார்.