போபால்: முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி வகித்து வந்த முதல்வர் பதவி தப்பியது என்று பாஜக முன்னாள் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
போபால் நகரில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது, அவரை பதவி நீக்கம் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விரும்பியதாகக் குறிப் பிட்டார்.
"குஜராத்தில் 2002இல் மதக் கலவரம் வெடித்த பிறகு, அந்த மாநிலத்தில் முதல் அமைச்சராகப் பதவி வகித்து வந்த நரேந்திர மோடியை பதவி விலக அறிவுறுத்த வேண்டும் என்று வாஜ்பாய் முடிவு செய்திருந்தார்.
"2002இல் கோவாவில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றபோது, மோடி ஒருவேளை பதவி விலக மறுத் தால் குஜராத் அரசைக் கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்," என்றார் யஷ்வந்த் சின்ஹா.
அச்சமயம் பாஜக தலைமை நடத்திய ஆலோசனைக் கூட்டத் தில் பங்கேற்ற அப்போதைய உள்துறை அமைச்சர் அத்வானி, குஜராத் அரசை கலைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாகக் குறிப்பிட்ட அவர், மோடி அரசு கலைக்கப்பட்டால் தானும் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக அத்வானி எச்சரித்ததாகக் கூறினார்.
இதன் காரணமாகவே பிரதமர் வாஜ்பாய் தமது முடிவை செயல் படுத்தவில்லை என்றும் சின்கா மேலும் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் போட்டியிட பாஜக தலைமை இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் கட்சித் தலைமையிடமும் பிரதமர் மோடி மீதும் கடும் அதி ருப்தியில் உள்ளார் சின்கா.
மேலும் பிரதமர் மோடிக்கு எதி ராக அவ்வப்போது சில கருத்துக் களையும் தெரிவித்து வருகிறார்.
இந்த முறையும் மூத்த தலை வரான அவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

