முதலாவது அபாச்சி ஹெலிகாப்டரை பெற்றது இந்தியா

புதுடெல்லி: அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அபாச்சி கார்டியன் ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை அமெரிக்கா விடம் இருந்து பெற்றுள்ளது இந்தியா.

கடந்த 10ஆம் தேதி அரிசோனா வில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இந்த ஹெலிகாப்டர் இந்திய விமானப்படை தலைவர் ஏ.எஸ். புடோலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமெரிக்க அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

மொத்தம் 22 ஹெலிகாப்டர் களை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா செய்து கொண்டது.

அவற்றுள் முதல் ஹெலிகாப்டர் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஹெலிகாப்டர்கள் ஜூலை மாதம் இந்தியாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்படும்.

அபாச்சி கார்டியன் ஹெலி காப்டரின் இயக்கம் குறித்து இந்திய விமானப்படை வீரர்க ளுக்கு அமெரிக்காவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய விமானப்படையின் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப இந்த ஹெலிகாப்டரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம். வெகு தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்குவதற்கும், எதிரிகளின் வான்பறப்புக்குள் நுழைந்து தாக்குவதற்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உகந்த தேர்வாக இருக்கும் எனப் பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon