ஜெட் ஏர்வேஸ் பங்கு ஏலம் முடிவடைந்தது

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனை ஏலத்தின் போது நான்கு விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து பங்குச்சந்தையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் மதிப்பு மூன்று விழுக் காடு அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடி யில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது இயக்கத்தை கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித் தது. அதன் கடன் சுமையைக் குறைக்க முன்வந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி, தற்போது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்துக்கு பொறுப் பேற்றுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ள வங்கிகள் இணைந்து எஸ்பிஐயின் தலை மையில் குழு அமைத்து நிர்வாகத் தைக் கைப்பற்றின. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஏலத் தில் விற்பன செய்ய முடிவெடுக் கப்பட்டது. இது தொடர்பான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதியுடன் ஏலக்கெடு முடிவுக்கு வந்ததையடுத்து, நான்கு விண் ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. 

எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனமும், இண்டிகோ பார்ட்னர்ஸ் நிறுவன மும் விண்ணப்பம் அளித்திருப்ப தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிஹாட் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கணிச மான பங்குகளை தன்வசம் வைத் திருந்தது. 

இந்நிலையில் மீண்டும் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தங்களது ஒரு நிறுவ னத்தால் மட்டுமே ஜெட் ஏர்வேசை மீட்டுவிட முடியாது என்றும் எதிஹாட் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவில் ஜெட் ஏர்வேஸ் மீட்கப்படும் என்ற நம்பிக் கையுடன் அதன் ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஜெட் ஏர்வேசை தொடர்ந்து இயங்க வைக்க அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக எஸ்பிஐ தலைமையிலான வங்கிக்குழு தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழி யர்களுக்கு கடந்த சில மாதங்க ளாக ஊதியம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே முதற்கட்டமாக குறைந்தபட்ச நிதியை இதற்காக ஒதுக்க வேண்டும் என ஸ்டேட் வங்கியிடம் ஊழியர்கள் வலியு றுத்தி உள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon