ஓபிஎஸ் தொகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆடவர் கைது

ஓபிஎஸ் தொகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆடவர் கைது

1 mins read

தேனி: துணை முதல்வரான ஓ. பன்னீர்செல்வம் தொகுதியில் மீனாட்சிபுரம் அருகே இருக்கும் பொட்டல்களத்தைச் சேர்ந்த கெளர் மோகன்தாஸ் என்பவர் அப்பகுதி யில் இயற்கை வேளாண்மைப் பண்ணை நடத்தி வருகிறார்.

நக்சலைட் படையினரின் கூட் டாளி என்ற சந்தேகத்தின் அடிப் படையில் கடந்த சில மாதங் களாகவே கௌர் மோகன்தாஸை போலிசார் கண்காணித்து வந்த னர். திடீரென அவரது காரை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது ஏ.கே.47 துப்பாக்கி, நாட்டுத் துப்பாக்கி, இரட்டைக் குழல் துப்பாக்கி என மூன்று துப் பாக்கிகளோடு கைத்துப்பாக்கிகள் மூன்று, அரிவாள், கத்தி, ஈட்டி, வாள் போன்ற எட்டு ஆயுதங்களும் மற்றும் 20க்கும் மேற்பட்ட கைபேசி களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. கௌர் மோகன் தாஸை கைது செய்த போலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

தேனி மாவட்டத்தில் பெரிய குளம், ஆண்டிபட்டி, வருசநாட்டு பகுதிகளில் நக்சலைட் நடமாட்டம் இருந்ததன்பேரில் போலிசார் ஏற் கெனவே சிலரை கைது செய்து விசாரித்தனர்.