தரையில் உருண்ட சுயேச்சை வேட்பாளர்

தரையில் உருண்ட சுயேச்சை வேட்பாளர்

2 mins read

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் அகிம்சா சோசலிஸ்ட் கட்சி சார்பில் இரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்பாளர் பட்டி யலில் இவரது பெயர் அகர வரிசைப்படி 4வது இடத்தில் இருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் இவரது பெயரின் முதல் எழுத் தான 'இ' நீக்கப்பட்டு ரமேஷ் என்று குறிப் பிடப்பட்டு 9வது இடத்தில் இடம்பெற்றி ருந்தது.

இதனைக் கண்டித்து தேர்தல் ஆணை யத்திற்கும் அரவக்குறிச்சி தேர்தலை நடத் தும் அலுவலருக்கும் கடந்த 4ஆம் தேதி ரமேஷ் மனு அளித்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்து எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என தெரி கிறது.

இதனால் அவர் வேட்பாளர் பட்டியலில் அகர வரிசைப்படி சரியான இடமான 5வது இடத்தை தனக்கு கொடுக்குமாறு வலி யுறுத்தி, தேர்தல் நடத்தும் அலுவலகமான அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்த போலிசார், வேட்பாளர் ரமேஷை தடுத்து நிறுத்தி தேர்தல் நடத்தும் அலு வலரான மீனாட்சியிடம் அழைத்துச் சென் றனர்.

அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் அலுவலர் கூறினார்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ரமேஷ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது.