கமல்ஹாசன்: சாராய கங்கை ஓடுகிறது

கமல்ஹாசன்: சாராய கங்கை ஓடுகிறது

1 mins read

சூலூர்: சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "சாராய கங்கை பெருகி ஓடும் இந்த நாட்டில் ஜீவநதிகள் வற்றிப்போய் கிடக்கின்றன," என்று கூறியுள்ளார்.

"தற்போதைய ஆட்சியாளர்கள் நாடாள தகுதி யற்றவர்கள். தவறுகளையும் பித்தலாட்டங்களையும் செய்பவர்கள். அவர்களைக் குறைசொல்வதை விட்டு விட்டு மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்கிறோம். குடிநீர் பற்றாக்குறை தீர்க்கமுடியாத பிரச்சினையல்ல. நேர்மையான அரசியல் நடந்தால் வீடு தேடி குடிநீர் கிடைக்கும். அதற்கான நேரத்தையும், வாய்ப்பையும் எங்களுக்குக் கொடுக்கவேண்டும்," என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.