மதுரை: அதிமுக ஆட்சி கலைய நாங்கள் வாக்களிப்போம் என்று டிடிவி தினகரன் கட்சியான அமமுக கொள்கை பரப்பு செய லாளர் தங்கத் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
மதுரையில் நேற்று செய்தியாளர் களிடம் பேசிய தங்கத் தமிழ் செல்வன், "22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அம முகதான் வெற்றிபெறும்," என்றார்.
தினகரன் தலைமையில் நல்லாட்சி அமைப்பதற்காக அதிமுக ஆட்சியைக் கலைப்போம். அதற்காக வாக்களிப்போம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"இது துரோகிகளின் ஆட்சி. ஊழல் ஆட்சியாக உள்ளது. ஊழலை மையமாகக் கொண்டு அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. திமுகவோடு நாங்கள் எதற்கு கூட்டணி வைக்கவேண்டும்? ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க திமுகவோடு கூட்டணி வைத்தவர் தான் ஓபிஎஸ். பொதுமக்கள் எங் களுக்கு ஆதரவு அளித்துள் ளார்கள் என்பது வருகிற 23ஆம் தேதி தெரியவரும்.
"அன்றைய நாளில் தோல்வி யோடு அமைச்சர்கள் காணாமல் போவார்கள். அவர்கள் பாஜகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படு வதற்கு இல்லை. எடப்பாடி பழனி சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக் கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மறைமுகமான மோதல்கள் தொடர்கின்றன.
"தேர்தல் ஆணையம் என்பது இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது.
"அதிமுகவினர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினையை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாக்கு எண் ணிக்கை மையத்தில் குண்டர்கள் நுழைய வாய்ப்பு உள்ளது.
"தேனி தொகுதியில் மறு வாக்குப் பதிவு யாரும் கேட்க வில்லை. ஆனால் மறுவாக்குப் பதிவு நடக்கும் போதுதான் இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது," என்று தங்கத் தமிழ்செல்வன் சொன்னார். இதற்கிடையே அதிமுக ஆட்சியை தினகரனால் தொட்டுக்கூட பார்க்கமுடியாது என்று அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

