மத்தியில் யார் என்பதை தீர்மானிக்கும் டெல்லி மக்களவைத் தேர்தல் இன்று

மத்தியில் யார் என்பதை தீர்மானிக்கும் டெல்லி மக்களவைத் தேர்தல் இன்று

2 mins read

இந்தியாவில் இன்றைய 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தலைநகர் டெல்லி பங்கேற்கிறது. இங்குள்ள ஏழு தொகுதிகளின் வெற்றியையும் ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்குகிறது. அதற்குக் காரணம் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் இந்த ஏழு தொகுதிகளின் வெற்றி பெறும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது. அதுமட்டு மின்றி மேற்கு டெல்லி தொகுதி யில் வெற்றிபெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்து வரு வது கடந்த 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது.

1998ஆம் ஆண்டில் 7ல் 6 தொகுதிகளை பாஜக கைப்பற் றியது. அதன் பயனாக பாஜக தலைமையிலான அரசாங்கத்தை வாஜ்பாய் அமைத்தார். இருப்பினும் அடுத்த ஆண்டும் மீண்டும் மக் களவைத் தேர்தல் நடைபெற்ற போது ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்று வாஜ்பாய் மூன்றாம் முறை பிரதமர் பதவியில் அமர்ந்தார்.

இருப்பினும், 2004 தேர்தலில் காங்கிரஸ் அலை வீசியபோது டெல்லியின் ஆறு தொகுதிகள் அக்கட்சிக்குச் சென்றன. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அர சாங்கம் மத்தியில் அமைந்தது. மன்மோகன் சிங் பிரதமர் ஆனார்.

2009 தேர்தலில் ஏழு தொகு திகளிலும் காங்கிரசே வெற்றி பெற்றது. மீண்டும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பதவி ஏற்றது. ஆனால் 2014ல் பாஜகவுக்கு வாய்ப்புக் கொடுத்தது டெல்லி.

இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது என அக்கட்சித் தலைவர்கள் மத்தி யில் கருத்து நிலவுகிறது. எனவே தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளை தனது கூட்டணியில் பாஜக இணைக்கும் என்றும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருவ தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சி களின் ஒற்றுமையைக் குலைக்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள் ளார். உத்தரப் பிரதேசத்தின் பகு ஜன், சமாஜ்வாடி, கேரளாவில் இடதுசாரி, ஆந்திராவில் தெலுங்கு தேசம், மேற்கு வங்கத்தில் திரி ணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சி களின் வாக்குகளைப் பிரிக்கும் வேலையை காங்கிரஸ் செய்து வருவதாக பிடிஐ செய்தி நிறு வனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குற்றம் சாட்டினார். மத்தி யில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அதற்கு ராகுல்தான் காரணமாவார் என்றார் அவர்.