யோகி: ராகுலுக்கே தெரியாது

யோகி: ராகுலுக்கே தெரியாது

1 mins read

மிசாபூர்: உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்ய நாத், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சாடினார். எதிர்த்தரப்பினர் வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வென்றால் பிரதமர் பதவியில் யார் அமர்வார் என்பது அந்தக் கட்சியின் தலைவரான ராகுல் காந்திக்குக்கூடத் தெரியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் கிண்டலாகக் கூறினார். "பிரதமர் வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் தலைவர்களைக் கேட்டுப் பாருங்கள். உருப்படியாக எதையுமே சொல்லமாட்டார்கள். ஏனென்றால் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது என்பது அவர்களுக்குத் திட்டவட்டமாகத் தெரியும்," என்று தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய உபி முதல்வர் குறிப்பிட்டார்.