மும்பை: மும்பை தாதரில் உள்ள போலிஸ் நிலைய வளாகத்திற்குள் இருக்கும் ஒரு கட்டடத்தில் நேற்று மூண்ட தீயில் 16 வயது பெண் மாண்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தார் என்றும் புகை, மூச்சுத் திணறல் காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலிஸ் வளாகத்திற்குள் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் மூன்றாவது மாடியில் தீ மூண்டதாக அதிகாரிகள் நேற்றுத் தெரிவித்தனர்.

