கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் தேர்தல் பணிக்காக அனுப்புவதுபோல் துணை ராணுவப்படையினருக்கான சீருடையில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, தெற்கு 24-வது பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட பசந்தி பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

