கர்னூல்: ஆந்திரப் பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் நேற்று தனியார் பேருந்து ஒன்றும் ஒரு ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 15 பேர் கொல்லப் பட்டதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.
உயிரிழந்தவர்கள் தெலுங் கானா மாநிலம் கத்வால் மாவட் டத்தில் உள்ள ராமாவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் ஒரு ஜீப்பில் திரு மணத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது பேருந்தும் ஜீப்பும் மோதிக்கொண்டன.
அந்தப் பேருந்து ஹைதராபாத் நகரிலிருந்து பெங்களூருக்குச் சென்றுகொண்டிருந்தது. பேருந் தில் இருந்த பயணிகள் சிலரும் காயம் அடைந்து மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர்.

