மோடி: எதிரணியினர் கலக்கம்

மோடி: எதிரணியினர் கலக்கம்

2 mins read

லக்னோ: இந்தியாவில் தன் மீதும் தனது அரசாங்கத்தின் மீதும் நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதால் எதிரணியினர் கலக்கம் அடைந்து இருக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கவேண்டும் என்று மக்கள் திட்டவட்டமாக முடிவு செய்து இருப்பதாகவும் மக்களுடைய இந்த விருப்பம் தமக்கு தெள்ளத் தெளிவாக தெரியவந்து இருக் கிறது என்றும் உத்தரப் பிரதேசத் தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய போது திரு மோடி கூறினார்.

இந்தியாவில் 6ஆம் கட்ட தேர்தல் வாக்களிப்பு நேற்று பரபரப் பாக நடந்த நிலையில், 7ஆம் கட் டத்திற்கான தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். உத்தரப் பிரதேசத்தின் கு‌ஷி நகரில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் மோடி பேசினார். நிலையான, நேர்மை­யான, தீர்க்கமான ஓர் அரசு அமையவேண்டும் என்று இந்திய மக்கள் வாக்களித்துக் கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், வாக்காளர்களின் வாக்கு கள் தமக்கு மிகவும் முக்கியமான வையாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, கு‌ஷி நகர் பகுதியில் தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட்டபோது காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளை ராணு வத்தினர் சுட்டுக்கொன்றனர்.

இதுபற்றி கருத்து கூறிய பிரதமர், தேர்தல் நடக்கும்போது மோடி ஏன் பயங்கரவாதிகளைக் கொல்கிறார் என்று சிலர் கேட்கக் கூடும் என்றார்.

ஆனால் ஆயுதம் ஏந்தி பயங்கர வாதி தாக்குதல் நடத்த வரும் போது, வீரர்கள் தேர்தல் ஆணை யத்திடம் சென்று அந்தப் பயங்கர வாதியைக் கொல்வதற்கு அனு மதி கொடுங்கள் என்று கேட்டு விட்டு கொல்லவேண்டுமா என்று திரு மோடி கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்திடம் அனு மதி வாங்கிவிட்டுத்தான் பயங்கர­வாதியை மோடி கொல்லவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கூறினா லும் கூறக்கூடும் என்றாரவர்.