மும்பை: பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஆகியோரின் வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுப் பயணங்களுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.393 கோடி செலவாகி உள்ளது. மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்த நிலவரம் தெரியவந்து உள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மே முதல் 2019 பிப்ரவரி வரை பிரதமர் மோடி 49 வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

