பிரதமர் மோடி: வியூகத்தை வகுத்துத் தந்தது நான்தான்

பிரதமர் மோடி: வியூகத்தை வகுத்துத் தந்தது நான்தான்

1 mins read

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் அரங்கேற்றப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கர வாதிகள் நடத்திய இத்தாக்கு தலுக்குப் பதிலடியாக, பாகிஸ் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பால் கோட் பகுதியில் இந்திய விமா னப்படை தாக்குதல் நடத்தியது.

அந்தப் பால்கோட் தாக்குதலை நடத்த விமானப்படைக்குத் தான் வியூகம் வகுத்துக் கொடுத்து ஊக்குவித்ததாக பிரதமர் மோடி பேசி இருக்கும் பேச்சு சமூக வலைத் தளங்களில் பரவுகிறது.

"விமானத் தாக்குதல் நடக்க இருந்த நாளில் வானிலை நன்றாக இல்லை.

"வல்லுநர்கள் தாக்குதலை இன்னொரு நாளுக்கு மாற்றிவிட லாம் என நினைத்தார்கள்.

"ஆனால் நான்தான் வானில் மேகமூட்டம் இருந்தால் மேகங் களே நம்மை ரேடார் பார்வை யிலிருந்து காப்பாற்றும் என ஆலோசனை கூறினேன்.

"திட்டமிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்றேன்" என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி யில் பேசியபோது மோடி தெரிவித் தார். திரு மோடி தன் தேர்தல் பிரசாரப் பேச்சுகளில் தொடர்ந்து இதையே பெருமையுடன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.