புதுடெல்லி: இந்தியாவில் நடக்கும் தேர்தலில் வெறுப்பு உணர்வை வெளிப்படுத்தி வரும் பாஜக தோற்றுவிடும் என்றும் அன்பைப் பயன்படுத்தி வரும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 6வது கட்ட வாக்களிப்பு நேற்று டெல்லி உள்ளிட்ட மொத்தம் 59 தொகுதிகளில் நடந்தது.
டெல்லி அவுரங்கசீப் லேனில் இருந்த ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வந்த ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் இவ் வாறு தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லி சர்தார் பட்டேல் வித்யாலயாவில் வாக்கு அளித்துவிட்டு வெளியே வந்த உத்தரப்பிரதேச (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பேசவேண் டியதை விட்டுவிட்டு தேவையில் லாத கதைகளை பிரதமர் கூறி வருவதால் மக்கள் ஆவேசம் அடைந்து உள்ளதாகவும் தேர்தலில் பாஜக தோற்கும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் அவுரங்கசீப் லேனில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். படம்: இந்திய ஊடகம்

