கனிமொழி: பாஜகவும் அதிமுகவும் இணைந்து முரண்பட்ட கூட்டணி

கனிமொழி: பாஜகவும் அதிமுகவும் இணைந்து முரண்பட்ட கூட்டணி

1 mins read
6b873f1c-9c20-4985-913f-10d65eb96e2c
-

கோவை: பாஜகவும் அதிமுகவும் இணைந்து முரண்பட்ட கூட்டணியை உருவாக்கி உள்ளனர் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் தற்போதைய தமிழக ஆட்சியாளர் கள் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை எனக் குறை கூறினார்.

"இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு கவலைப்படுவதில்லை. மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி இருப்பதாக முதல் வர் பழனிசாமி உரிய விவரங் களுடன் பட்டியலிட்டால் அவருக்கு திமுக சார்பாககூட பாராட்டுவிழா நடத்தி இருப்போம்.

"மே 23ஆம் தேதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்தான் தமிழகத் தின் நிரந்தர முதல்வராகப் பொறுப்பேற்பார். அதன்பிறகு முதல்வர் பதவி குறித்து எடப்பாடி பழனிசாமி கனவுகூட காணமுடி யாது" என்றார் கனிமொழி.

ஸ்டாலினை விமர்சிக்கும் தகுதி முதல்வர் பழனிசாமிக்கோ அதிமுகவினருக்கோ அறவே இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.