கோவை: நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவதால்தான் தமிழக மக்கள் தொடர்ந்து அதிமுகவுக்கு வெற்றியைத் தருவதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக வுக்குக் கிடைக்கும் வெற்றி களைக் கண்டு திமுக பொறா மைப்படுகிறது என்றார்.
"திமுக ஆட்சியை ஜெய லலிதா முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார். ஆனால் ஸ்டா லினோ முதல்வராக ஆசைப்படுகி றார். ஸ்டாலின் மக்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. எனவே, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார். முதல்வராக வேண்டும் எனும் அவரது கனவு பலிக்காது" என்றார் பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா ஆட்சியில் நூற்றுக்கணக்கான தொலை நோக்குத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், 6 லட்சம் வீடுகள், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல திட்டங்களைக் குறிப்பிட்டார்.
இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை வாங்கிய நீங்கள் பேசாமல் இருக்கலாமா? என்று கூடியிருந்த மக்களை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார்.

