இந்தியாவின் நாடாளுமன்ற நாயகர் சுமித்ரா மஹாஜனைப் பாராட்டிய அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தன்னைக் கண்டிக்கக்கூடிய தகுதியுடையவரான ஒரே பாரதிய ஜனதா தலைவர் அவர்தான் எனத் தெரிவித்திருக்கிறார்.
'தை' எனப் பிரபலமாக அழைக்கப்பட்டு வரும் திருவாட்டி சுமித்ரா திறமையுடனும் சுயக்கட்டுப்பாட்டுடனும் செயல்பட்டு வந்ததால் மக்களின் மனதில் அவர் நீங்கா இடம் பிடித்திருப்பதாகத் திரு மோடி புகழ்ந்தார்.
எட்டு தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றிபெற்ற ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமை இவரைச் சாரும். கடந்த மாதம் 76 வயதை எட்டிய திருவாட்டி சுமித்ரா, தற்போது நடைபெறும் பொதுத்தேர்தலில் பங்கேற்க மறுத்தபோதும் பாரதிய ஜனதா கட்சிக்காகத் தொடர்ந்து பிரசாரம் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.
இந்தியப் பொதுத்தேர்தலின் ஆறாவது கட்டம் நேற்று முடிந்தது. ஏழு மாநிலங்களில் நிகழ்ந்த அந்தத் தேர்தலில் 100 மில்லியன் பேருக்கும்அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தலின் இறுதிக் கட்டம் மே 19ஆம் தேதி நிகழும். வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நிகழும்.

