இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை ஃபானி புயல் தாக்கியதை அடுத்து அங்குள்ள 14,000 கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது. புயலின் தாக்கத்தால் மாண்டோரின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்திருக்கிறது.
வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதுடன் குடிநீர், மின்சாரம், தொலைத் தொடர்பு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால முறையில் நடைபெறுவதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 1,600 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று இந்திய மாநில அரசு அறிவித்திருந்தது.
ஆயினும், புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகள் இயல்புநிலைக்கு இன்னும் திரும்பாத நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

