நாகை: வேதாந்தா, ஓஎன்ஜிசி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தமிழகத்தில் இயற்கை எரிவாயு திட்டத்தை அமல்படுத்த இந்தியா வின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு விவசாயி கள் சங்கக் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதியில் எரிவாயுத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதைக் கண்டித்தும் அந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத் தியும் ஜூன் 12ஆம் தேதி மனித சங்கிலிப் போராட்டம் நடக்கும் என்றும் அந்தக் கூட்டமைப்பு அறி வித்து இருக்கிறது.
இதனிடையே, வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்கள் தமிழகத் தில் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்குத் தேவையான பரி சோதனைகளை நடத்த அனுமதிக் கப்பட்டு இருப்பதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆகியோர் மத்திய அரசாங்கத்தை இதன் தொடர்பில் குறைகூறினர்.
தேர்தல் நியதிகள் இன்னமும் நடப்பில் இருப்பதால் இந்த அனுமதி தேர்தல் நியதிகளை மீறிய ஒரு செயலாகும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
இத்தகைய திட்டங்களுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களை அவர் சுட்டிக் காட்டினார். தமிழ்நாட்டிலும் புதுச் சேரியிலும் 274 இயற்கை எரி வாயுக் கிணறுகளை அமைப்பதற் கான சோதனைகளை நடத்த வேதாந்தா நிறுவனத்துக்கு அனு மதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இத்தகைய திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் இவற்றை வேதாந்தா நிறுவனத்தின் கையில் கொடுத்தால் அவை பேராபத்து திட்டங்களாக மாறிவிடும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமை யாக எச்சரித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
வேதாந்தா நிறுவனம் பெரும் நெருக்குதல்களைக் கொடுத்து இந்த அனுமதியை அரசாங்கத்தி டம் இருந்து பெற்றிருப்பதாக தினகரன் தெரிவித்தார்.

