'முடிந்தால் மம்தா கைது செய்யட்டும்'

'முடிந்தால் மம்தா கைது செய்யட்டும்'

2 mins read

கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் முன்னதாக பிரசாரம் செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி கூறியது போலவே நேற்று அமித்ஷாவும் தைரியம் இருந்தால் மம்தா என் னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துப் பேசினார்.

கோல்கத்தாவில் உள்ள ஜாய் நகர் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று பிரசாரம் செய்தபோது, "யாராவது 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உடனே கோபம் பொங்குகிறது. இப்போது நான் 'ஜெய் ஸ்ரீராம்' என சொல்கிறேன். மம்தாவே, உங் களுக்கு தைரியமிருந்தால் என் னைக் கைது செய்யுங்கள். இன்று வரையில் கோல்கத்தாவில்தான் இருப்பேன்," என்றார் அமித் ஷா.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவ டைந்த நிலையில், ஏழாவதாக நடக்கவுள்ள இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது மேற்கு வங்கத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளுக்கும் வாக்களிப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதி யில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்துகொள்ளும் மிக பிரம்மாண் டமான பொதுக்கூட்ட பேரணிக்கு அனுமதி அளிக்க காவல் துறை யினர் மறுத்துவிட்டனர். அமித் ஷா கூட்டத்துக்குத் தடை விதித் ததைக் கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேனிங் பகுதி யில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத் தில் அமித் ஷா பேசியபோது, "மம்தா என்னைக் கைது செய்யத் துடிக்கிறார். மேற்குவங்கத்தில் நான் கலந்துகொள்ளும் பேர ணியை அவர் தடைசெய்யலாம், ஆனால் பாஜகவின் வெற்றியை ஒருபோதும் அவரால் தடை செய்யமுடியாது," என்றார்.