பாஜக ஆட்சியை அகற்றுவதே காங்கிரசின் நோக்கம்

பாஜக ஆட்சியை அகற்றுவதே காங்கிரசின் நோக்கம்

1 mins read

புதுடெல்லி: மத்தியில் அடுத்து ஆட்சியமைக்க தேவைப்படும் பெரும்பான்மை எம்பிக்கள் பலம் கிடைக்கவில்லை என்றால் ராகுல் காந்தி ஆட்சியமைக்க உரிமை கோர மாட்டார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரி வித்துள்ளனர்.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள தமிழக ஊடகம், குறைந்த பட்சம் 272 இடங்களில் வெற்றி பெறா விட்டால் வேறு கட்சிகளுக்கு அல்லது அணிக்கு வழிவிட்டு ராகுல் ஒதுங்கிக் கொள்வார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாகக் குறிப்பிடப்பட் டுள்ளது.

"பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதே எதிர்க் கட்சிகளின் ஒருமித்த திட்ட மாக உள்ளது. இதற்காக எத் தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்குமாறு கட்சியி னரை ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்," என காங்கி ரசார் கூறுவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.