மோடியை பெண்கள் ஆதரிக்க கூடாது என்கிறார் மாயாவதி

மோடியை பெண்கள் ஆதரிக்க கூடாது என்கிறார் மாயாவதி

1 mins read

லக்னோ: மோடி போன்றவர்களுக்கு நாட்டில் உள்ள பெண் கள் வாக்களிக்கக் கூடாது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி கூறியுள்ளார்.

இதுவே மோடியால் கைவிடப் பட்ட அவரது மனைவிக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக் கும் என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஆதாயத்துக்காக கட்டிய மனைவியை மோடி கைவிட்டதாக சாடியுள்ள அவர், இப்படிப்பட்ட மோடி பிறரது சகோதரிகளுக்கும் மனைவிமார் களுக்கும் எப்படி மதிப்ப ளிப்பார் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

"பாஜகவில் உள்ள தங்களது கணவர்கள் பிரதமர் மோடியை நெருங்கும் போது அவர்களது மனைவிகள் எல்லாம் அச்சப்படுவதாக எனக்குத் தெரிய வந்துள்ளது.

"மோடியைப் போலவே தங்கள் கணவர்களும் மனைவியைக் கைவிட்டு ஓடிப்போவார்களோ என்று அஞ்சுகின்றனர்," என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

அண்மைய சில தினங்களாக மாயாவதிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நடந்து வரும் வார்த்தைப் போர் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.