மன்னிப்பு கேளுங்கள்: சாம் பிட்ரோடாவிடம் ராகுல் வலியுறுத்து

மன்னிப்பு கேளுங்கள்: சாம் பிட்ரோடாவிடம் ராகுல் வலியுறுத்து

2 mins read

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்துள்ள கருத்தை நிச்சயம் ஏற்றுக்கொள்ள இயலாது என காங்கிரஸ் தேசியத் தலைவர் ராகுல் காந்தி தெரி வித்துள்ளார்.

தமது கருத்துக்காக சாம் பிட்ரோடா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்க ளுக்கு எதிரான கலவரம் குறித்து சாம் பிட்ரோடாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, 'என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது' என்று பதில் அளித்திருந்தார் சாம் பிட்ரோடா. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரி வித்திருந்தனர்.

சாம் பிட்ரோடாவின் கருத்தை முன்வைத்து காங்கிரசை கடுமை யாகச் சாடி பாஜகவினர் பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் செய்து வரு கின்றனர்.

வரும் 19ஆம் தேதி அம்மாநிலத் தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக் கிறது. இந்நிலையில் சீக்கியர் களுக்கு எதிரான கலவரம் குறித்து சாம் பெட்ரோடா தெரிவித் திருக்கும் கருத்து காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கள் கருதுகின்றனர்.

இதையடுத்து சாம் பிட்ரோடா மன்னிப்பு கோர வேண்டும் என ராகுல் வலியுறுத்தி உள்ளார்.

"இப்படிப்பட்ட கருத்துகளை ஒருபோதும் ஏற்க இயலாது. தனது செயலுக்காக சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும். அத்துடன், நாட்டு மக்களிடமும் அவர் பகி ரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

"இதை அவரிடமே தொலைபேசி வழி நேரடியாக கூறியிருக்கிறேன்," என்று ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

கலவரம் குறித்த தனது கருத் துக்காக சாம் பிட்ரோடா ஏற் கெனவே ஒருமுறை மன்னிப்பு கோரி இருந்தார்.

பாதிக்கப்பட்ட சீக்கியர்களின் மனவலியை நான் புரிந்து கொண் டிருக்கிறேன் என்றார் அவர்.

இந்நிலையில் ராகுல் வீட்டின் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிட்ரோடா மன்னிப்பு கோர வேண்டும் என ராகுல் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.