கொச்சி: கேரளாவில் உள்ள உழவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனன் நாயர். ஆட்டோ ஓட்டு நரான இவருக்கு, தனது மகளின் திருமணத்தின் போது குடும்பத் தாரை ஆட்டோவில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆசை.
தந்தையின் ஆசையை நிறை வேற்ற முடிவு செய்த அவரது மகள் மகிமா தந்தையின் ஆட் டோவை அழகாக அலங்கரித்து, தன் குடும்பத்தாரை அமர வைத்து தானே திருமண மண்டபத்துக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்றார். உறவினர்களும் அவரை ஆட்டோ விலேயே பின் தொடர்ந்தனர்.

