தொண்டர்களுடன் பேச தடுப்புக்கட்டைகளை தாண்டிக் குதித்து அசத்திய பிரியங்கா

தொண்டர்களுடன் பேச தடுப்புக்கட்டைகளை தாண்டிக் குதித்து அசத்திய பிரியங்கா

2 mins read

போபால்: காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் களத்தில் மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார் அக் கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மேற்கொண்ட பிரசா ரத்தின் போது அவர் தடுப்புச்சுவ ரைத் தாண்டிக் குதித்த சம்பவம் குறித்த தகவலும், அது தொடர்பாக வெளியான காணொளித் தொகுப் பும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நேற்று முன்தினம் போபால் நகரில் உள்ள நேரு திடலில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கானோர் முன்பு ஆவேசமாகப் பேசினார் பிரியங்கா.

இந்நிகழ்வில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்களுடன் பேச விரும்பிய பிரியங்கா, மேடையை விட்டு கீழே வந்தார். எனினும் மேடைக்கும் மக்களுக்கும் இடையே பெரிய தடுப்புக்கட்டைகள் போடப்பட்டு இருந்தன.

பொது மக்கள் பிரியங்காவை நெருங்கிவிடக் கூடாது என்பதற் காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. எனினும் பெரிய தடுப்பு கட்டைகளுக்கு வெளியே நின்று கொண்டு பொதுமக்களுடன் உரையாடினார் பிரியங்கா.

ஒரு கட்டத்தில் திடீரென உற் சாகமடைந்த அவர், தடுப்புக் கட் டைகள் மேல் ஏறி, அவற்றைத் தாண்டிக் குதித்து மக்கள் கூட் டத்திற்குள் நுழைந்தார்.

பின்னர் அங்கிருந்த பெண்க ளிடம் கைகொடுத்துப் பேசிய அவர், அனைவரிடமும் நலம் விசா ரித்தார். பிரியங்கா காந்தி திடீ ரென தடுப்புக் கட்டைகளைத் தாண்டிக் குதித்த காணொளிப் பதிவு இணையத்தில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

இதற்கிடையே இந்தூர் நகரில் தமது பிரசார வாகனத்தில் பிரியங்கா சென்று கொண்டிருந்த போது சாலையின் இருபுறமும் ஏரா ளமானோர் திரண்டு நின்று கை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது ஒரு பகுதியில் கூடி யிருந்த பாஜகவினர், பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். இந்நிலையில் அவர் களைக் கடந்து சென்ற பிரியங்கா, திடீரென தனது காரை நிறுத்தி உள்ளார். பின்னர் பாஜகவினரை நெருங்கி, "உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன், வாழ்த்துக்கள்," என்று கூறி கைகுலுக்கி விடைபெற்றார்.