மரங்களில் ஆணி அடிக்காதீர் என இளையர்கள் குழு வலியுறுத்து

மரங்களில் ஆணி அடிக்காதீர் என இளையர்கள் குழு வலியுறுத்து

1 mins read

மும்பை: விளம்பரப் பதாகைகளை வைக்கவும் தொங்கவிடவும் மரங்களில் ஆணி அடிக்கக்கூடாது என மும்பையைச் சேர்ந்த இளையர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றுவதற்கு என 25 இளையர்கள் புது இயக்கத்தை தொடங்கி உள்ளனர். இதையடுத்து சுமார் இரண்டாயிரம் மரங்களில் அடிக்கப்பட்ட 5,700 ஆணிகளை இவர்கள் அகற்றியுள்ளனர்.

மரத்தில் அடிக்கப்படும் ஆணி துருப்பிடிப்பதால் மரத்தை பலவீனப்படுத்துகிறது என்றும், இதனால் மரங்களால் நல்ல பிராணவாயுவைத் தர இயலாது எனவும் இந்த அமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.