புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 29 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 8,049 பிரமாணப் பத்திரங்களில் 7,928 பத்திரங்களை ஆய்வு செய்தபோது,
இத்தகவல் தெரிய வந்துள்ளது. இவர்களிலும் 11 விழுக்காட்டினர் அல்லது 881 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 5 கோடி ரூபாய்க்கும் அதிகம். கடந்த 2014 பொதுத் தேர்தலில் மொத்த வேட்பாளர்களில் 27 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.

