புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டுவிட்டர் தளத்தில் 94 லட்சம் பேர் பின்தொடரும் நிலையில், பிரதமர் மோடியை 4.7 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இந்தப் பட்டியலில் 1.1 கோடி பேரால் பின்தொடரப்படும் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாம் இடத்தில் உள்ளார். அண்மைய
புள்ளிவிவரங்களின்படி, அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஒட்டுமொத்தமாக அதிகமானோரால் பின்தொடரப்படும் அரசியல்
வாதிகளில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, 18.27 கோடி பேருடன் முதலிடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் 11.09 கோடி பேருடன், பிரதமர் மோடி 2ஆம் இடத்தில் உள்ளார்.

