மோடி: ஒரு பயங்கரவாதி நிச்சயமாக இந்துவாக இருக்க முடியாது

ஒரு பயங்கரவாதி நிச்சயமாக இந்துவாக இருக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறி பெரும் சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து திரு மோடியின் கருத்துகள் வெளிவந்துள்ளன. உலகமே ஒரு குடும்பம்தான் என்பது இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை என்று அவர் பேட்டி ஒன்றில் கூறினார்.

அரவக்குறிச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரசார உரை ஆற்றியபோது கமல்ஹாசன்  “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே” எனத் தெரிவித்தார். 

திரு மோடியின் கருத்துகள் வெளிவந்ததை அடுத்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தீவிரவாதத்திற்கு எந்த மதமும் கிடையாது என்றும் திரு மோடியின் கருத்து மிகச் சரியானது என்று கூறினார்.