தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கமல் மீது குவியும் வசைகளும் வழக்குகளும்

2 mins read
ba37b6d1-82a2-461c-81cc-c5641c41f775
-

"சுந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து. அவர்தான் காந்தியைச் சுட்ட நாதுராம் கோட்சே" எனக் கூறி பெரும் சர்ச்சைக்கு வித்திட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவின் விசாரணையைத் தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் இன்று முடிவு செய்தது.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்திலும் கமல்ஹாசன் மீது மற்றொரு வழக்கை இந்து சேனா கட்சியின் சார்பில் விஷ்ணுகுப்தா என்பவர் புதிதாக வழக்கு தொடர்ந்தார்.இதுவரையில் கமல்ஹாசனின் கருத்துக்கு பாஜக, அதிமுக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் தங்களது கண்டனங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. ஒருவேளை ஐஎஸ் பயங்கர வாதிகளிடமிருந்து லஞ்சம் வாங்கி கமல்ஹாசன் இப்படி யெல்லாம் பேசினாரோ என்று வைணவ சமயத் தலைவரான மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காந்தியை நாதுராம் கோட்சே சுட்டது தவறல்ல என்று அவர் கூறியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

"கமலின் நாக்கை அறுக்க வேண்டும்" எனக் கூறிய தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவும் கண்டனங்கள் பெருகி உள்ளன. அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கமல்ஹாசன் தம் தவற்றை ஒப்புக் கொண்டால் தாமும் அவ்வாறு செய்யத் தயார் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மதச்சார்பற்ற நாடாக உருவாகியுள்ள இந்தியாவில் கமல்ஹாசனின் பேச்சு இந்துக்களை வம்புக்கு இழுக்கின்ற வேலையாகத் தெரிவதாக அவர் கூறினார். ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கமல் இப்படி யெல்லாம் கூறுகிறாரா என்ற குற்றச் சாட்டை ஜீயரைப்போல் பாலா ஜியும் முன்வைத்துள்ளார்.