போலி கையெழுத்திட்ட மனைவி

போலி கையெழுத்திட்ட மனைவி

1 mins read

சேலம்: கணவரைப் போல் போலி கையெழுத்திட்டு மணமுறிவு பெற முயன்ற பெண்ணுக்கு போலிசார் வலைவீசி உள்ளனர். மும்பையைச் சேர்ந்த நிலோஃபரின் கணவர் மஸ்தான் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் நிலோஃபருக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டது.

கணவர் அனுப்பிய பணத்தில் வாங்கிய வீட்டை விற்று காசாக்கி விட்டார். மற்றொரு வீட்டையும் தனக்கு;r சொந்தமாக்கிக் கொண்டார். இந்நிலையில் கணவரைப் போலவே கையெழுத்திட்டு மணமுறிவுக்கான பத்திரத்தைத் தயார் செய்த நிலோஃபர் மீது கணவர் மஸ்தான் போலிசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நிலோஃபர் தலைமறைவாகி விட்டார்.