'அமைச்சரவையில் ஆறு பெண்களைக் கொண்ட முதல் அரசாங்கம் மோடி அரசாங்கம்'

'அமைச்சரவையில் ஆறு பெண்களைக் கொண்ட முதல் அரசாங்கம் மோடி அரசாங்கம்'

1 mins read
679c7ea2-0f02-4144-b355-7fb7700ef846
-

சுதந்திரத்திற்குப் பிறகு அமைச்சரவையில் ஆறு பெண்களைக் கொண்ட முதல் அரசாங்கம் திரு நரேந்திர மோடியின் அரசாங்கம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண்களில் இருவர் அமைச்சரவை பாதுகாப்புக் குழுவில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது என்று திருவாட்டி சுஷ்மா கூறினார்.

வாரணாசியில் தாம் ஆற்றிய உரையின் சில பகுதிகளை டுவிட்டரில் வெளியிட்ட சுஷ்மா, திரு மோடியின் அரசாங்கத்தை அதற்கு முன்பிருந்த அரசாங்கங்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். இந்தியாவின் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தி, ஏற்கெனவே இருந்த பெண் அமைச்சர் ஒருவரைத் தமது அமைச்சரவையில் தொடர்ந்து வைத்திருந்ததாகவும் அவர் புதிதாக வேறு எந்தப் பெண் அமைச்சரையும் நியமிக்கவில்லை என்றும் திருவாட்டி சுஷ்மா சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையே, ஓமானுக்குக் கடத்தப்பட்ட ஹைதரபாதீ பெண், ஐந்து மாதங்களுக்குப் பிறகு பத்திரமாக வீடு திரும்பியுள்ளார். குல்சும் பானு என்ற அந்தப் பெண் தமது பாதுகாப்பை உறுதி செய்த இந்திய வெளியுறவு அமைச்சுக்கும் திருவாட்டி சுஷ்மாவுக்கும் நன்றி தெரிவிப்பதாக 'ஏஎன்ஐ' செய்தி நிறுவனம் தெரிவித்தது.