சிலையை மறுநிர்மாணம் செய்ய மோடி உறுதி

சிலையை மறுநிர்மாணம் செய்ய மோடி உறுதி

1 mins read
a2374ef4-db50-4f5e-a402-011c06879496
-

மேற்கு வங்காளத்தில் இடிக்கப்பட்ட சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் உருவச்சிலை இருந்த இடத்தில் அதே வித்யாசாகருக்காகப் புதிய சிலை ஒன்று அமைக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி கூறியிருக்கிறார். அவரது கட்சியான பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சிலர் அந்தச் சிலையை உடைத்ததாக பெங்காலின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

காவி நிற டி-சட்டை அணிந்திருந்த சில நபர்கள் சிலையை உடைப்பதைக் காட்டும் காணொளியையும் திரிணாமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்தக் காணொளியில் இருப்பது தாங்கள் அல்லர் என்று பாஜகவினர் கூறுகின்றனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அந்தச் சிலையை உடைக்க ஆட்களை ஏவிவிட்டு பழியை பாஜக மீது சுமத்தப் பார்ப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டுகிறார்.

"வித்யாசாகரின் லட்சியத்தை நிறைவு செய்வதில் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். அவருக்காக பஞ்ச உலோகச் சிலையை அதே இடத்தில் எழுப்புவோம்," என்றார் திரு மோடி. மேற்கு வங்காளத்தில் பொதுத் தேர்தலின் இறுதிக் கட்டம் நடைபெறவுள்ள நிலையில் இச்சம்பவம் நடந்தது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.