மதுரை: "வழக்கமாக ஆளுங்கட்சிதானே வாக்காளர்களுக்கு வாக்களிக்கப் பணம் விநியோகிக்கும். இப்போது என்ன அதிசயமாக தினகரன் அணியினரும் பணம் விநியோகம் செய்கின்றனர்," என்று பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலை வழக்கமான 'இடைத்தேர்தல் பாணி'யில் கட்சிகள் எதிர்கொள்கின்றன.
வாக்காளர்களுக்குத் தாராளமாகப் பணம் விநியோகிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆளுங்கட்சிக்குப் போட்டியாக அமமுகவினரும் பண விநியோகம் செய்வதாக அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட கோயில் சன்னதி பகுதியில் செல்லூர் ராஜு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், "நம்மிடம்ருந்து விலகிப் பிரிந்தவர்கள் தொகுதியில் கறுப்பு பேன்ட், வெள்ளைச் சட்டை அணிந்துகொண்டு தெருத்தெருவாக உலா வருகிறார்கள். வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிதான் பணம் கொடுக்கும்.
"ஆனால், திருப்பரங்குன்றத்தில் வித்தியாசமாக தினகரன் அணியினர் பணத்தை விநியோகம் செய்துவருகிறார்கள். நமக்குப் பயந்து அவர்களும் பணம் கொடுக்கிறார்கள். அவர்கள்
சர்வசாதாரணமாக வரும் அளவுக்கு அதிமுக ஆட்சி நடைபெறுகிறது," என்று பேசியுள்ளார்

