பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

1 mins read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினரைக் கண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதற்குப் பதிலடி தரும் வகையில் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார் என பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.