புதுடெல்லி: காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று போபால் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஆனால் இப்படி கூறியதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பிரக்யாசிங் தாகூருக்கு பாஜக மேலிடம் உத்தர விட்டுள்ளது.
"கோட்சே பற்றி பிரக்யாசிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் விளக்கம் கேட்கப்படும்," என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் தெரிவித்தார்.

