கோல்கத்தா: இந்திய வரலாற்றில் முதல் முறையாக மேற்கு வங்கத் தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் ஒரு நாள் முன்பே நிறுத்த தேர்தல் ஆணையம் உத் தரவு பிறப்பித்துள்ளது.
கோல்கத்தாவில் தேர்தல் பிரசாரங்களில் வன்முறைச் சம்ப வங்கள் மூண்டதைத் தொடர்ந்து இந்த முடிவை ஆணையம் எடுத் துள்ளது.
இதையொட்டி தேர்தல் பிர சாரத் தடை நேற்று இரவு 10 மணிக்கு அமலுக்கு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார்.
கோல்கத்தா கல்லூரி சாலை யில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே இந்தப் பேரணி செல்லும் போது பெரிய கலவரம் வெடித்தது.
இதன் பிறகு தொடர் கலவரங் களும் ஏற்பட்டன.
இதனால் மேற்கு வங்கத்தில் 324வது சட்டப்பிரிவை வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் ஆணை யம் அமல்படுத்தியுள்ளது.
சிறப்பு விதி அமலுக்கு வந்த பின்பு குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்.
அதன்படி நேற்று இரவுடன் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
தேர்தல் ஆணையம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்று எதிர்பாராத மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதன் காரணமாக மம்தா பானர்ஜி இன்று திட்டமிட்டிருந்த அனைத்துப் பிரசாரங்களும் தடைபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி யின் பிரசாரங்களும் பாதிக்கப் பட்டுள்ளன.
இதற்கிடையே பிரதமர் மோடியின் பிரசாரங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கும் வகை யில் தடையை இரவு வரை ஒத்தி வைத்தது ஏன் என்று எதிர்க் கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.
மேற்கு வங்கத்தில் இரண்டு பிரசாரக் கூட்டங்களில் மோடி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அவரது பிரசாரக் கூட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பிரசாரத் தடையை ஆணையம் பிறப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கையை கடுமை யாக விமர்சித்துள்ள மம்தா, சட்ட விரோதமானது, நியாயமற்றது என்று சாடியுள்ளார்.
"தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகிறது. அமித் ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறையை நடத்தியுள்ளார், வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற் காக பிரதமர் மோடி வருத்தப்பட வில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனைத் தீவிரமாக எடுத்துள் ளனர்.
"அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும். பிரதமர் மோடி உங்களால் உங்கள் மனைவியையே கவனித் துக் கொள்ளமுடியவில்லை, எப்படி நாட்டை கவனித்துக்கொள் வீர்கள்? என்றும் மம்தா கேள்வி யெழுப்பியுள்ளார்.

