அமேசானுக்கு கடும் எதிர்ப்பு

அமேசானுக்கு கடும் எதிர்ப்பு

1 mins read

மும்பை: Amazon.com இணையத்தளத்தில் கழிவுத் தொட்டி மூடி மற்றும் பல பொருட்களின் மீது இந்துக் கடவுளின் படத்தைப்போட்டு விற்கப்படுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது #BoycottAmazon எனும் 'ஹாஷ்டாக்' சூடு பறக்கிறது.

அந்த இணையத் தளத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஆயிரக் கணக்கானவர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் வலியுறுத்தியுள்ளனர்.