பிரியங்காவின் கடைசி கட்ட முயற்சி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா, ஏழாவது கட்டப் பொதுத்தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அம்மாநிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது தொண்டர்கள் அவர் மீது பூக்களைத் தூவி காங்கிரசுக்கு ஆதரவான வாசகங்களை உற்சாகத்துடன் முழங்கினர்.

ராகுல் காந்தியின் தலைமையில் தற்போதுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் சமயத்தில் புத்துயிரூட்ட பிரியங்கா தேர்தலில் களமிறக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் அகிலேஷ் பிரதாப் ‘பிபிசி’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பிப்ரவரியில் முதன்முதலாக பிரியங்கா பிரசார மேடை ஏறியபோது கட்சித் தொண்டர்கள் பலர் உற்சாகம் அடைந்ததாக பிபிசியின் கட்டுரை குறிப்பிட்டது.
மக்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்டுள்ள பிரியங்கா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது. ஆயினும், தன் மீதான மக்கள் அபிமானத்தை காங்கிரசுக்கு வாக்குகளாக மாற்ற பிரியங்காவால் இயலுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

படத்தில் பீகார் மாநிலம் முசாஃபர்பூர் அரசு மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வரும் தனது மகளின் உடல்நிலை தேற வேண்டும் எனும் கவலையுடன் ஒரு தந்தை கட்டிலில் சாய்ந்து கண்ணயர்ந்து கிடக்கும் காட்சி. படம்: ராய்ட்டர்ஸ்

26 Jun 2019

பீகாரில் மூளைக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 262ஆக உயர்வு; பொதுமக்கள் மத்தியில் பீதி

மனுத்தாக்கல் செய்ய வந்த ஜெய்சங்கர். படம்: ராய்ட்டர்ஸ்

26 Jun 2019

ஜெய்சங்கர் மாநிலங்களவை தேர்தலில் மனுத்தாக்கல்